5 வருட பயிற்சியாளரை பிரிந்தார் டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா

2017 ஆம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் எலினா ஸ்விடோலினா 3 ஆம் இடத்துக்கு முன்னேறிய போது அவருக்கு பயிற்சியாளராக செயல்பட்டவர் ஆண்ட்ரூ பெட்டல்ஸ்.
5 வருட பயிற்சியாளரை பிரிந்தார் டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா
Published on

உக்ரைன்

இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றவர் எலினா ஸ்விடோலினா. உக்ரைன் நாட்டை சேர்ந்த இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்ட்ரூ பெட்டல்ஸ் பயிற்சியின் கீழ் பல தொடர்களில் பங்கேற்று உள்ளார்.

டென்னிஸ் அரங்கில் அனைவரும் எதிர்நோக்கும் நட்சத்திர வீராங்கனை - பயிற்சியாளாராக இவர்கள் இருந்து வந்தனர். ஆண்ட்ரூ பெட்டல்ஸ் பயிற்சியின் கீழ் எலினா ஸ்விடோலினா 11 டென்னிஸ் பட்டங்களை வென்று உள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் எலினா ஸ்விடோலினா 3 ஆம் இடத்துக்கு முன்னேறிய போது அவருக்கு பயிற்சியாளராக செயல்பட்டவர் ஆண்ட்ரூ பெட்டல்ஸ்.

இந்த நிலையில் தனது 5 வருட பயிற்சியாளரை இன்று பிரிந்து உள்ளார் எலினா ஸ்விடோலினா.

இது குறித்து எலினா ஸ்விடோலினா கூறியுள்ளதாவது:

5 ஆண்டுகள் 11 பட்டங்களுக்கு பிறகு ஆண்ட்ரூவும் நானும் தனித்தனியாக செல்ல இது சரியான நேரம் என்று கருதுகிறோம்.அவரது கடின உழைப்புக்கும் முடிவில்லாத ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவரது எதிர்கால வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

X

Daily Thanthi
www.dailythanthi.com