ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு - முன்னாள் விம்பிள்டன் சாம்பியனுக்கு 4 ஆண்டுகள் தடை

மார்கெட்டா வோன்ட்ரோசோவா, 2023-ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார்.
ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு - முன்னாள் விம்பிள்டன் சாம்பியனுக்கு 4 ஆண்டுகள் தடை
Published on

புதுடெல்லி,

செக்குடியரசை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மார்கெட்டா வோன்ட்ரோசோவா, ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக 4 ஆண்டுகள் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார்.

மறுத்த வீராங்கனை

கடந்த டிசம்பர் மாதம், ஊக்கமருந்து சோதனைக்காக ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகளை சேகரிக்க சென்ற அதிகாரிகளிடம், வோன்ட்ரோசோவா அவற்றை வழங்க மறுத்ததாக கூறப்பட்டது.

விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் நேர்மை கமிட்டி விசாரணை நடத்தியது. அதில், ஊக்கமருந்து சோதனைக்கு வோன்ட்ரோசோவா ஒத்துழைக்க மறுத்தது உறுதி செய்யப்பட்டது.

4 ஆண்டுகள் தடை

இதையடுத்து, 26 வயதான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுக்கு 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் சாம்பியன்

மார்கெட்டா வோன்ட்ரோசோவா, 2023-ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உலக டென்னிஸ் அரங்கில் கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com