பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பரிசுத் தொகை அதிகரிப்பு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் வருகிற 28-ந் தேதி முதல் ஜூன் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.443 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு டென்னிஸ் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.3 சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டு ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.20 கோடி பரிசாக வழங்கப்படும். தகுதி சுற்று முதல் பிரதான சுற்று வரை ஒவ்வொரு வெற்றிக்கும் வழங்கப்படும் தொகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com