பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வரலாற்றில், 5 மணி நேரம் மற்றும் 29 நிமிடங்கள் என இதுவே நீண்ட நேரம் நடந்த இறுதி போட்டியாகும்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்
Published on

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில், ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் (வயது 22) மற்றும் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர் (வயது 23) விளையாடினர்.

இந்த போட்டியில், தொடக்கத்தில் 2 செட்களை கைப்பற்றி சின்னர் முன்னணியில் இருந்தபோது, அடுத்தடுத்த செட்களை அல்காரஸ் கைப்பற்றினார். இதனால், 5-வது செட்டை நோக்கி ஆட்டம் சென்றது. அதில், கடுமையான போட்டி காணப்பட்டது.

இறுதியில், 4-6, 6-7 (4), 6-4, 7-6 (3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி, கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டியில் சின்னர் தோல்வி அடைவது இதுவே முதன்முறையாகும்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வரலாற்றில், 5 மணி நேரம் மற்றும் 29 நிமிடங்கள் என இதுவே நீண்ட நேரம் நடந்த இறுதி போட்டியாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com