பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் (செர்பியா), அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 4-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வேரெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சினெர் உடன் மோத உள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com