பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் நடைபெற்று வருகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பாரீஸ்,

ஆண்டின் 2-வது 'கிராண்ட்ஸ்லாம்' தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி), நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானிக் சின்னெர் 6-4, 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அதிர்ச்சி தோல்வி கண்ட ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜானிக் சின்னெர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com