பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி: நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி: நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்
Published on

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் கிரீஸ் நாட்டின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் விளையாடினர்.

இதில் தொடக்கத்தில் இருந்தே யாருக்கு வெற்றி என்பதில் பலத்த போட்டி ஏற்பட்டது. இதில், முதல் இரண்டு செட்டுகளை சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதனால் அவர் வெற்றி பெறும் சூழல் காணப்பட்டது.

எனினும், அடுத்த 3 செட்டுகளையும் ஜோகோவிச் கைப்பற்றி வெற்றியை தன்வசப்படுத்தினார். இதனால், 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் கோப்பையை தட்டி சென்றார். இருவருக்கும் இடையேயான இறுதி போட்டி 4 மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com