பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் முன்னணி வீரரான ஜன்னிக் சின்னெர், ரஷியாவின் பாவெல் கோடோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட சின்னெர் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் பாவெல் கோடோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் சின்னெர் பிரான்சின் கோரெண்டின் மௌடெட்டை எதிர்கொள்ள உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com