பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; முதல் சுற்று ஆட்டத்தில் மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க முன்னணி வீராங்கனையான மரியா சக்காரி பிரான்சின் வர்வரா கிராச்சேவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய மரியா சக்காரி அடுத்த இரு செட்களை 4-6, 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழ்ந்தார். இறுதியில் மரியா சக்காரி 6-3, 4-6, 3-6 என்ற புள்ளிக்கணக்கில் வர்வரா கிராச்சேவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு முதல் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com