கொரோனா அச்சுறுத்தலால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி தொடங்குவதாக இருந்தது.
கொரோனா அச்சுறுத்தலால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு
Published on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு மே 30-ந் தேதி தொடங்கும் என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளனம் நேற்று அறிவித்தது. பாதுகாப்பான சூழ்நிலையில் முடிந்த அளவுக்கு அதிக பார்வையாளர்கள் முன்னிலையில் போட்டி நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டதுடன், தினசரி 1,000 ரசிகர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதி அளிக்கப்பட்டது நினைவுகூரக்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com