பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ரோகன் போபண்ணா இணை 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
image courtesy:AFP
image courtesy:AFP
Published on

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை பிரேசிலின் ஆர்லாண்டோ லஸ் - மார்செலோ சோர்மன் இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த போபண்ணா இணை 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் ஆர்லாண்டோ லஸ் - மார்செலோ சோர்மன் இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com