பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரைபகினா

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானை சேர்ந்த எலினா ரைபகினா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com