பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் சபலென்கா - கோகோ காப் இன்று மோதல்

மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சபலென்கா - கோகோ காப் இன்று மோத உள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாரீஸ்,

ஆண்டின் 2-வது 'கிராண்ட்ஸ்லாம்' தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா (பெலாரஸ்) - கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோர் மோத உள்ளனர்.

அரையிறுதி ஆட்டங்களில் முறையே லோயிஸ் பாய்சனை (பிரான்ஸ்) வீழ்த்தி கோகோ காப்பும், இகா ஸ்வியாடெக்கை (போலந்து) வீழ்த்தி சபலென்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

இன்றைய ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் கடுமையாக போராடுவர் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என நம்பலாம். இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com