பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி; நோவக் ஜோகோவிக் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நோவக் ஜோகோவிக் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி; நோவக் ஜோகோவிக் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இன்று செர்பிய நாட்டு வீரரான நோவக் ஜோகோவிக் மற்றும் லித்துவேனியா நாட்டின் ரிகர்டாஸ் பெராங்கிஸ் ஆகியோர் விளையாடினர்.

83 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் ஜோகோவிக் 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெராங்கிசை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபனில் ஜோகோவிக்கிற்கு கிடைத்த 70வது வெற்றி இதுவாகும்.

இதனை தொடர்ந்து கொலம்பியாவின் டேனியல் இலாஹி கேலனை எதிர்த்து அடுத்த போட்டியில் ஜோகோவிக் விளையாட இருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com