ஜெனீவா ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஜெனீவா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் டாலன் கிரீக்ஸ்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்,  தாமஸ் மச்சாக்கை எதிர்கொள்ள உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com