

ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கிளாரி லியூ சாம்பியன் பட்டம் வென்றார்.
விக்டோரியா பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்ஸ் ஈலாவை எதிர்த்து கிளாரி லியூ விளையாடினார். இதில் சிறப்பாக ஆடிய கிளாரி லியூ 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஈலாவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் தனது முதல் டபிள்யூ.டி.ஏ. டூர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
உலகத் தரவரிசையில் 102-வது இடத்தில் இருந்த கிளாரி லியூ, 17-வது இடத்தில் இருந்த ஈலாவை வீழ்த்தியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தத் தொடர் முழுவதும் ஒரு செட்டைக்கூட இழக்காமல் கிளாரி லியூ சாம்பியன் பட்டத்தை வென்றார்.