ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய‌ ஈலா

அரையிறுதியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை எதிர்கொண்டார்.
ஈலா
Published on: 

ஹாங்காங்,

ஹாங்காங் டென்னிஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

போராடி வெற்றி

பரபரப்பாக நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் இருவரும் தொடக்கம் முதலே கடுமையாகப் போராடினர். முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ஈலா கைப்பற்றினார். இதற்குப் பதிலடி கொடுத்த சக்காரி, 2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார்.

இதனால் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் சிறப்பாக விளையாடிய ஈலா 6-4 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்திய அவர், ஹாங்காங் ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் யாருடன் மோதல்?

இந்தத் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஈலா, இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை கிளெய்ர் லியூயை எதிர்கொள்கிறார்.

X