

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கிளெய்ர் லியூ, ரஷியாவின் அலெக்சாண்ட்ரா ஷுப்லாட்ஸேவை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கிளெய்ர் லியூ, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் அலெக்சாண்ட்ரா ஷுப்லாட்ஸேவை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் ஹாங்காங் ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
2022-ம் ஆண்டு ரபாத் ஓபன் தொடருக்குப் பிறகு, கிளெய்ர் லியூ முதல் முறையாக டபிள்யூ.டி.ஏ. தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த முறை தனது முதல் டபிள்யூ.டி.ஏ. ஒற்றையர் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.