பாத்ரூம் போன இடத்தில் கிடைத்த உத்வேகம் - ’விம்பிள்டன் கோப்பையை கைப்பற்ற அதுதான் காரணம்’ - நோஸ்கோவா

கரோலினா முச்சோவாவை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார் லிண்டா நோஸ்கோவா
நோஸ்கோவா
Published on

லண்டன்,

முதல் முறையாக விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவா, தனது வெற்றிக்கு பின்னால் இருந்த சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முதல் கிராண்ட்ஸ்லாம்

’கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது.

இதில் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், லிண்டா நோஸ்கோவா 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

'சிறிய கோப்பை வேண்டாம்'

போட்டியின் இரண்டாவது செட்டை இழந்த பிறகு, நோஸ்கோவா பாத்ரூமுக்கு சென்று முகத்தை கழுவி விட்டு வெளியே வரும் வழியில், இரண்டாம் இடம் பெறுபவருக்கான சிறிய கோப்பையையும், சாம்பியனுக்கான பெரிய கோப்பையையும் பார்த்துள்ளார்.

அந்த தருணத்தில், "நான் சிறிய கோப்பையுடன் வெளியேற மாட்டேன். என்ன நடந்தாலும் சாம்பியனுக்கான பெரிய கோப்பையைத்தான் வெல்வேன்" என்று தனக்குள் உறுதி எடுத்து கொண்டதாக நோஸ்கோவா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மூன்றாவது செட்டில் அற்புதமாக விளையாடி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

இளவயது சாதனை

21 வயதான லிண்டா நோஸ்கோவா, 2011-ம் ஆண்டுக்கு பிறகு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற மிக இளவயது வீராங்கனை என்ற பெருமையை நோஸ்கோவா பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை செக் குடியரசின் டென்னிஸ் ஜாம்பவான் பெட்ரா க்விட்டோவா படைத்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com