இண்டியன்வெல்ஸ் ஓபன்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

3வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவாரோவுடன் மோதினார்.
Image : AFP 
Image : AFP 
Published on

கலிபோர்னியா,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவாரோவுடன் மோதினார்.

இதில் சபலென்கா 3-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் எம்மாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நாளை நடைபெறும் காலிறுதியில் எம்மா நவாரோ, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதுகிறார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com