

வாஷிங்டன்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர்-இத்தாலியின் ஆண்ட்ரியா வவசூரி ஜோடி உடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 7-6 (7-2) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.