இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இண்டியன்வெல்ஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையரில், முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), கமிலா ஒசாரியோ (கொலம்பியா) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கமிலா ஒசாரியோ 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் நவோமி ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com