இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மிர்ரா ஆண்ட்ரீவா

Image Courtesy: @BNPPARIBASOPEN / X (Twitter)
மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சபலென்காவை வீழ்த்தி மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கலிபோர்னியா,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6 2 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்காவும், 2வது செட்டை 6 4 என்ற புள்ளிக்கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதில் அபாரமாக செயல்பட்ட மிர்ரா ஆண்ட்ரீவா 6 3 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்காவை வீழ்த்தினார். இறுதியில் 2 6, 6 4, 6 3 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டத்தை வென்றார்.






