image courtesy:twitter/@BNPPARIBASOPEN
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்
சபலென்கா அரையிறுதியில் மேடிசன் கீஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
இண்டியன்வெல்ஸ்,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), சம்சோனோவா (ரஷியா) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இவர் அரையிறுதியில் மேடிசன் கீஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

