இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மரியா சக்காரி

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கலிபோர்னியா,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப், கிரேக்க டென்னிஸ் வீராங்கனையான மரியா சக்காரியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் கோகோ காப் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மரியா சக்காரி 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் கோகோ காப்-பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com