சர்வதேச டென்னிஸ்: ஸ்வியாடெக், அல்காரஸ் 'சாம்பியன்'

அல்காரஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சிட்சிபாசை தோற்கடித்து கோப்பையை வசப்படுத்தினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஸ்டட்கர்ட்,

ஸ்டட்கர்ட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீராங்கனையான சபலென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி மகுடம் சூடினார். அவர் கைப்பற்றிய 13-வது பட்டம் இதுவாகும்.

இதே போல் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த பார்சிலோனா ஓபன் டென்னிசின் இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 5-ம் நிலை வீரர் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய 19 வயதான அல்காரஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சிட்சிபாசை தோற்கடித்து கோப்பையை வசப்படுத்தினார். அவருக்கு சுமார் ரூ.4 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com