ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்காரஸ்!

இறுதிப்போட்டியில் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை அல்காரஸ் எதிர்கொள்கிறார்.
அல்காரஸ்
Published on: 

டோக்கியோ,

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ், சகநாட்டவரான ஜாமு முனாரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முதல் செட்டை இழந்தும் வெற்றி

அரையிறுதியில் முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்த அல்காரஸ், அடுத்த 2 செட்களிலும் அபாரமாக விளையாடி 6-3, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜப்பான் ஓபன் தொடரில் தொடர்ந்து 9-வது வெற்றியை பதிவு செய்தார்.

4-வது ஏடிபி இறுதிப்போட்டி

இந்த சீசனில் அல் காராஸ் விளையாடும் 4-வது ஏடிபி இறுதிப்போட்டி இதுவாகும். இறுதிப்போட்டியில் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை அல்காரஸ் எதிர்கொள்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com