ஜப்பான் ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரிட்ஸ் காலிறுதியில் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
image courtesy:AP/PTI
image courtesy:AP/PTI
Published on

டோக்கியோ,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டவரான செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றினார். பிரிட்ஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 6-7 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com