கொரியா ஓபன் டென்னிஸ்: ஷபோவலோவ், நிஷியோகா அரையிறுதிக்கு தகுதி..!

கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது.
கொரியா ஓபன் டென்னிஸ்: ஷபோவலோவ், நிஷியோகா அரையிறுதிக்கு தகுதி..!
Published on

சியோல்,

கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் மால்டோவா வீரர் ராடு ஆல்பட், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஷபோவலோவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ராடு ஆல்பட்டை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஜப்பானின் யோஷிடோ நிஷியோகாவுடன் மோதினார். இந்த போட்டியில் நிஷியோகா 6-2, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com