கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் - அரை இறுதிக்கு எம்மா ரடுகானு முன்னேற்றம்

கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் - அரை இறுதிக்கு எம்மா ரடுகானு முன்னேற்றம்
Published on

சியோல்,

கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரை இறுதி சுற்றுக்கு பிரிட்டன் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு முன்னேறியுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மேக்டா லின்னெட் உடன் எம்மா ரடுகானு மோதினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரடுகானு, 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com