மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரபை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-7 (5-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரபை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அல்காரஸ் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவை எதிர்கொள்ள உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com