மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட எலினா ரைபகினா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சாரா பெஜ்லெக்கை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். எலினா ரைபகினா நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் சக நாட்டவரான யூலியா புடின்ட்சேவாவை எதிர்கொள்ள உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com