மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஜன்னிக் சினெர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 34 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சினெர், ரஷியாவின் பாவெல் கோடோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட சினெர் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பாவெல் கோடோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16 சுற்று) முன்னேறினார். இன்று நடைபெறும் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டத்தில் சினெர் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர் கொள்ள உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com