மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ரபேல் நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 34 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் அர்ஜெண்டினாவின் பெட்ரோ காச்சினை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் கைப்பற்றிய நடால் 2வது செட்டை 6-7 (5-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட நடால் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் பெட்ரோ காச்சினை வீழ்த்தினார்.

இதன் மூலம் 6-1, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் பெட்ரோ காச்சினை வீழ்த்தி ரபேல் நடால் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். நாளை நடைபெறும் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டத்தில் நடால் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர் கொள்ள உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com