மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஸ்வேரெவ்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸ்சாண்டர் ஸ்வேரெவ் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ஸ்வேரெவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட ஆப் 16) முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com