மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனியல் மெத்வடேவ் - கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதினர்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மாட்ரிட்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ரஷிய வீரர் டேனியல் மெத்வடேவ் - கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதினர்.

 பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3,7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com