மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியுடன் மோதினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com