ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ரூப்லெவை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லஸ் அல்காரஸ்

ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP / Carlos Alcaraz
Image Courtesy: AFP / Carlos Alcaraz
Published on

துரின்,

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காராஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com