ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; டெய்லர் பிரிட்ஸை வீழ்த்திய ஜன்னிக் சின்னெர்

ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP / JANNIK SINNER
Image Courtesy: AFP / JANNIK SINNER
Published on

துரின்,

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜன்னிக் சின்னெர் 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தொடரில் இதே பிரிவில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காராஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com