மெக்சிகோ ஓபன்; 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நடால்

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரபேல் நடால் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மெக்சிகோ ஓபன்; 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நடால்
Published on

அகாபல்கோ,

மெக்சிகோ நாட்டின் அகாபல்கோ நகரில் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 35 வயது நடால் மற்றும் பிரிட்டனை சேர்ந்த கேமரூன் நார்ரி ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேமரூனை வீழ்த்தி ரபேல் நடால் பட்டம் வென்றுள்ளார். அகாபல்கோவில் நடாலுக்கு இது 4வது சாம்பியன் பட்டம் ஆகும். நடப்பு 2022ம் ஆண்டில் நடாலின் 3வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com