மியாமி ஓபன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

முதல் சுற்றில் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பிரெட்டெனியுடன் மோதினார்.
Image : AFP 
Image : AFP 
Published on

வாஷிங்டன்,

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பிரெட்டெனியுடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆண்டி முர்ரே முதல் செட்டை 4-6 என இழந்தார். இதனால் சுதாரித்த முர்ரே அடுத்த இரு செட்களை சிறப்பாக விளையாடி 6-3, 6-4 என கைப்பற்றினார். இதனால் ஆண்டி முர்ரே 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com