மியாமி ஓபன் டென்னிஸ்: அசரென்கா 2-வது சுற்றுக்கு தகுதி

இவர் 2-வது சுற்றில் கரோலினா முச்சோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மியாமி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையாக பெலாரசின் விக்டோரியா அசரென்கா, உக்ரைனின் கலினியா உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அசரென்கா 6-3 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 2-வது சுற்றில் ரோலினா முச்சோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com