மியாமி ஓபன் டென்னிஸ்; ஹோல்கர் ரூனே அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புளோரிடா,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர் ஹோல்கர் ரூனே (டென்மார்க்), அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த ஹோல்கர் ரூனே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6-4, 3-6, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் ரெய்லி ஓபெல்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com