மியாமி ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 64) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சக நாட்டவரான பெர்னார்டா பேரா உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெர்னார்டா பேராவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 3வது சுற்று ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அண்ணா கலின்ஸ்கயா உடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com