மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் தோல்வி கண்ட டெய்லர் பிரிட்ஸ்

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜக்குப் மென்சிக், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோத உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புளோரிடா,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளாரிடாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), செக் குடியரசின் ஜக்குப் மென்சிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட டெய்லர் பிரிட்ஸ் 6-7 (4-7), 6-4, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் ஜக்குப் மென்சிக்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜக்குப் மென்சிக், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோத உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com