

இண்டியன்வெல்ஸ்,
டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
உலகின் தலைசிறந்த 8 வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.
இதில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவும், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவும் மோதினர். முதல் செட்டில் இருவரும் கடுமையாகப் போராடினர். இறுதியில் 7-5 என்ற கணக்கில் அந்த செட்டை ஆண்ட்ரீவா கைப்பற்றினார்.
தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர், 6-3 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்விடோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
19 வயதான ஆண்ட்ரீவா, இந்தத் தொடரில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதுடன், ஒரு செட்டைக்கூட இழக்காம்ல் தனது முதல் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.