மான்டி கார்லோ டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மொனாக்கோ,

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com