மான்டி கார்லோ டென்னிஸ்; ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சின்னெர்

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மொனாக்கோ,

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே இத்தாலியின் ஜன்னிக் சின்னெரை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என எளிதில் கைப்பற்றிய சின்னெர் 2வது செட்டில் 6-7 (6-8) என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட சின்னெர் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரூனேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com