மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பும் நவோமி ஒசாகா!

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

சிட்னி,

'கிராண்ட்ஸ்லாம்'அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 முறை சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்க உள்ளார்.

குழந்தை பிறப்பை முன்னிட்டு இந்த ஆண்டில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருந்த ஒசாகா ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.

இது குறித்து ஒசாகா கூறுகையில்,

"நான் மீண்டும் போட்டியிடுவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனது சீசனை பிரிஸ்பேனில் தொடங்குவதை நான் எப்போதும் விரும்புகிறேன். மீண்டும் களத்திற்கு திரும்பி வர காத்திருக்க முடியவில்லை "என்று தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com