கனடா ஓபன் டென்னிஸ்: நிக் கிர்கியோஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

கிர்கியோஸ் சக ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஒட்டாவா,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணியின் நிக் கிர்கியோஸ் 6-7(2), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான டேனில் மெத்வதேவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நிக் கிர்கியோஸ் சக ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாரை 6-2 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com